Search This Blog

Monday, 30 September 2013

ரசூல் பூக்குட்டிக்கு மீண்டும் ஆஸ்கர் விருது?

ரசூல் பூக்குட்டிக்கு மீண்டும் ஆஸ்கர் விருது?

இந்திய சினிமாவின் நீண்டகால கனவான ஆஸ்கர் விருதினை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் முலம் நனவாக்கிய பெருமை இரண்டு பேருக்கு சேரும். ஒருவர் நம்ம ஊர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னொருவர் கேரளத்தைச்சேர்ந்த சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி.

அதன்பிறகு ரஹ்மான் இசையமைத்த படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், தற்போது ரசூல் பூக்குட்டி சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றிய தி குட் ரோடு என்ற படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத் மொழியில் உருவான இப்படம் ஏற்கனவே இந்திய அரசின் தேசிய விருது பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் சிறந்த படங்களை தேர்வு செய்தபோது 22 படங்களில் இந்த படத்தை ஆஸ்கர் விருது குழுவுக்கு அனுப்பு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்தும், விருது குறித்தும் ரசூல் பூக்குட்டி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை என்றாலும், படத்தில் சவுண்ட் பிரமாதமாக இருப்பதால் மீண்டும் பூக்குட்டிக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

No comments:

Post a Comment