மல்டி ஹீரோ கலாசாரம் ஆரோக்கியமான விசயம்! சித்தார்த்
வெயில், அங்காடித்தெரு, அரவான் படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது காவியத்தலைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ், வேதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படி லேட்டஸ்ட் நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதைக்களத்தை கிட்டப்பா-கே.பி.சுந்தரம்பாள் காதல் கதையாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
ஆனால் இதுபற்றி சித்தார்த்தைக்கேட்டால், கே.பி.சுந்தரம்பாள், கிட்டப்பா காலத்து கதையில் காவியத்தலைவன் உருவாகியிருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர்கள் நடித்த அந்த காலகட்டத்தில் இப்படத்தின் திரைக்கதையானது அமைந்திருக்கிறது என்பதே நிஜம். அவர்கள் காலத்தில் நடக்கிற கதை என்று சொன்னதை இப்படி தவறாக புரிந்து கொண்டு செய்தி பரப்பிவிட்டதாகவே தெரிகிறது என்கிறார்.
மேலும், இதே படத்தில் இன்னொரு ஹீரோவாக பிருதிவிராஜூம் நடிப்பது பற்றி கூறுகையில், பிருதிவிராஜ் மலையாளத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இந்த படத்தில் அவரும் ஹீரோ என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இது போன்று மல்டி ஹீரோக்களின் கதையில் நடிகர்கள் துணிந்து நடிக்கிற கலாசாரம் தென்னிந்திய சினிமாவில் அதிகரித்து வருவது ஆரோக்கியமான விசயமே என்கிறார்.
No comments:
Post a Comment