Search This Blog

Wednesday, 11 September 2013

கமிஷனரிடம் சினேகா புகார் செய்ய போவதாக பரபரப்பு!!

கமிஷனரிடம் சினேகா புகார் செய்ய போவதாக பரபரப்பு!!

சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகை சினேகா புகார் தெரிவிக்க வருவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தற்போது இரண்டு-மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சினேகாவை பற்றி அவதூறு செய்தி வெளிவந்ததாகவும், இதுகுறித்து அவர் சென்னை கமிஷனரிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் காலையில் பத்திரிகையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனையடுத்து ஏராளமான பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். சென்னையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. ஆனபோதும் கொட்டும் மழையில் பத்திரிகையாளர்கள் குவிந்து இருந்தனர். ஆனால் சினேகா வரவில்லை. அது பொய்யான தகவல் என தெரியவந்தது.

இதுகுறித்து சினேகா தரப்பில் கேட்டபோது அவரது கணவர் பிரசன்னா கூறுகையில், சினேகா பற்றி எந்தவிதமான அவதூறு தகவலும் பரவவில்லை. யாரோ இதனை கிளப்பி விட்டுள்ளார்கள். என பிரசன்னா கூறியுள்ளார்.

சினேகா வருவதாக வந்த தகவலால் கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

No comments:

Post a Comment