இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்!
எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷ், அந்த படத்திற்கான பப்ளிசிட்டிகளை முடுக்கி விடும்போது, சிவகார்த்திகேயனை ரஜினி ரேஞ்சுக்கு உயர்த்தி பேசினார். அவர்கள் கொடுத்த பில்டப் காரணமாக, இப்போது வெளியூர்களுக்கு சிவகார்த்திகேயன் செல்லும்போது அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம்.
சமீபத்தில்கூட வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்காக கோவை சென்றபோது, சிவகார்த்திகேயனைப்பார்த்து அப்படித்தான் அழைத்தார்களாம் அங்குள்ள ரசிகர்கள். அதைக்கேட்டு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தாலும், இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால், கோடம்பாக்கத்தில் இந்த பட்டத்துக்காக மோதிக்கொண்டிருக்கும் நடிகர்கள் நம்மை குமுறி விடுவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ, என்னைப்பார்த்து அப்படி சொல்லாதீர்கள் என்றாராம் சிவகார்த்திகேயன்.
அதோடு, உலகில் ஒரே சூரியன், ஒரே சநதிரன் இருப்பது போல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். அது நம்ம ரஜினி சார்தான். நானும் உங்களைப்போன்று அவரது தீவிர ரசிகன்தான். அவர் நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட வேண்டும் என்பதற்காக தியேட்டர்களில் முட்டிமோதிய அதே ரசிகனாகத்தான் இன்றைக்கும் இருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னையெல்லாம் இளைய சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.l
No comments:
Post a Comment