Search This Blog

Sunday, 9 June 2013

சிறு படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: யமுனா பட இயக்குனர் பேட்டி

சிறு படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: யமுனா பட இயக்குனர் பேட்டி


85a23274-361f-4c03-a7fd-db75e79c1d6f_S_secvpf              
                 திருச்சியில் இன்று யமுனா திரைப்படத்தின் இயக்குனர் இ.வி. கணேஷ்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
யமுனா திரைப்படம் எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக சத்யா, கதாநாயகியாக ஆந்திர அரசின் நந்தி விருது பெற்ற ஸ்ரீ ரம்யா நடித்துள்ளனர். வில்லனாக திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த நடிகர் டோனி நடித்துள்ளார்.
கிராமபுறங்களில் பெண்களை படிக்க வைப்பதாக கூறி அவர்களை தவறாக பயன்படுத்தும் கும்பலிடம் இருந்து கதாநாயகன், நாயகியை காப்பாற்றுவதுதான் படத்தின் கதை.
படத்திற்கு இலக்கியன் என்பவர் இசை அமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 120 தியேட்டர்களில் ரிலிசாகி உள்ளது. படம் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
கிளைமாக்சில் பெண்கள் பல வருடங்களுக்கு பிறகு கண் கலங்கியதாக கூறுகின்றனர். இது எனக்கு பெருமையாக உள்ளது. இருப்பினும் யமுனா போன்ற புதுமுக படங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்று படம் பார்த்தவர்கள் ஒருவரிடம் ஒருவர் கூறி யமுனா போன்ற சிறந்த படங்களை பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.
நான் திருமதி செல்வம் போன்ற டி.வி.நாடகங்களிலும், ஆட்டோ கிராப், ஜக்குபாய், பிரண்ட்ஸ் உட்பட 40 படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளேன். அந்த அனுபவத்தை வைத்து யமுனா படத்தை இயக்கினேன். தொடர்ந்து படங்களை இயக்குவேன் இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது படத்தின் வில்லன் நடிகர் டோனி உடனிருந்தார்.

No comments:

Post a Comment