Search This Blog

Monday, 10 June 2013

இயக்குனர் சங்க தேர்தல்: ஐஸ்வர்யா தனுஷ் ஓட்டுப்போட அனுமதி மறுப்பு

இயக்குனர் சங்க தேர்தல்: ஐஸ்வர்யா தனுஷ் ஓட்டுப்போட அனுமதி மறுப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக இருந்த பாரதிராஜாவின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க இன்று தேர்தல் நடந்தது. வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர் சங்க அலுவலகத்தில் காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என நிறைய பேர் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இத்தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக வந்தார். உள்ளே நுழைந்த அவரை தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதற்கு வருடா வருடம் ரூ.600 சந்தா செலுத்த வேண்டும். இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இந்த தொகையை செலுத்தவில்லையாம். எனவே, அவர் ஓட்டுப்போட அனுமதி கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கினார். தற்போது, கடல் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment