Search This Blog

Monday, 3 June 2013

ஜில்லா ஷுட்டிங் – கலந்து கொண்டார் விஜய்

ஜில்லா ஷுட்டிங் – கலந்து கொண்டார் விஜய்

நேசன் இயக்கத்தில் தயாராகும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஜில்லா படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பில் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் கலந்து கொண்டனர்.
சென்னை மோகன் ஸ்டுடியோவில் ஜில்லாவுக்கு என பிரமாண்ட அரங்கு அமைத்திருக்கிறார்கள். அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். மோகன்லால், விஜய் காம்பினேஷன் காட்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது நடந்த ஷுட்டிங்கில் விஜய்யுடன் விஜய் தம்பியாக நடிக்கும் மகத்தும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜில்லாவை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயின். டி.இமான் இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment