Search This Blog

Thursday, 2 May 2013

TAMIL CHINEMA

சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு துவங்கியது

5/2/2013 5:01:23 PM
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்து படம் இயக்கி வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். மின்னலே தொடங்கி கடைசியாக இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் இடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் சூர்யாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. அதனைத்தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக சூர்யாவும், கவுதம் மேனனும் இணைந்துள்ளனர்.

தனது போட்‌டான் கதாஸ் பேனரில் கவுதமே சொந்தமாக தயாரித்து, இயக்கவும் செய்யும் இப்படத்திற்கு துருவ நட்சத்திரம் என்று பெயர் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இப்படத்தின் டைட்டில் டிசனை வெளியிட்ட கவுதம், இப்படத்தின் பூஜையை இன்று காலை தனது அலுவலகத்தில் தொடங்கினார். பட பூஜையை தொடர்ந்து சூர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த விழாவில் சூர்யா, கவுதமுடன் டைரக்டர் பார்த்திபன், டைரக்டர் ராம், பிரேம் சாய், விக்னேஷ், மதன்கார்கி, எழுத்தாளர் சாரு நிவேதா, கலை இயக்குனர் ராஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment