Search This Blog

Thursday, 2 May 2013

கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்: சஞ்சய் தத் டென்ஷன்:

கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்: சஞ்சய் தத் டென்ஷன்:

செட்டில் பரபரப்பு

கே.எஸ்.ரவிக்குமார் பட ஷூட்டிங்கில் சஞ்சய் தத் டென்ஷனாக இருப்பதால் செட்டில் பரபரப்பு நிலவுகிறது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கிறார் சஞ்சய் தத். இதனால் விரக்தி அடைந்திருக்கிறார். அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்ற மும்பை படவுலகினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தண்டனையை ஏற்கப்போவதாக சஞ்சய் தத் கூறினார். இதற்கிடையில் படங்களில் நடித்து கொடுக்க வேண்டி இருப்பதால் கோர்ட்டில் சரண் அடைய அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு 4 வாரம் அவகாசம் அளித்து கோர்ட் உத்தரவிட்டது. தமிழில் விக்ரம் நடித்த ‘சாமி‘ படம் இந்தியில் ‘போலீஸ் கிரி‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதன் ஷூட்டிங்கில் சமீபத்தில் சஞ்சய்தத் கலந்துகொண்டார். காட்சியின்போதும், காட்சி இல்லாதபோதும் அவர் ஸ்பாட்டில் டென்ஷனாகவே இருக்கிறார். செட்டுக்குள் யாரையாவது பார்த்தால் காரணமே இல்லாமல் திட்டிக் தீர்க்கிறாராம். இதனால் அவரை கண்டாலே அங்கிருப்பவர்கள் ஒதுங்கி செல்வதுடன் அவரிடம் பேச பயப்படுகிறார்கள்.

இது பற்றி பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘சஞ்சய்தத் குழப்பத்திலேயே இருக்கிறார். அவ்வப்போது தானாகவே கண்ணீர் விட்டு அழுகிறார். குடும்பத்தினரை பற்றி நினைத்து கவலை அடைகிறார். தண்டனை தீர்ப்பு அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. காரணமே இல்லாமல் திட்டிக்கொண்டிருக்கும் சஞ்சய்தத் சில விநாடிகள் கழித்து அந்த நபர்களை அணுகி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கிறார் என்றார்.

"தங்களின் வருகைக்கு நன்றி"

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment