Search This Blog

Friday, 17 May 2013

மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்

மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்

526957_505885839476540_1843443367_nதனுஷின் சமீபகால படங்கள் தோல்விகளை சந்தித்து வருவதால், மரியான் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். ஏ.ஆர்.ரகுமான், பரத்பாலா, பூ பார்வதி கூட்டணியில் இணைந்திருப்பவர், இந்த படத்துக்காக நீச்சலே தெரியாமல் தண்ணீருக்குள் நடுக்கடலுக்குள் சென்று நடித்திருக்கிறார். அதோடு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நபீபியாவில் படமானபோது அங்குள்ள பாலைவனத்தில் பயங்கர வெயிலில் செருப்பு கூட அணியாமல் நடித்தாராம்.
அதோடு ஒரு காட்சியில் சிறுத்தையுடன் ஒருநாள் முழுக்க நடித்தாராம் தனுஷ். அப்போதெல்லாம் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டுமா என்று பயந்தாராம். ஆனால் இப்போது படம் நன்றாக வந்திருப்பதைப்பார்க்கும்போது பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.
மேலும். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அது இப்போதுநிறைவேறியிருக்கிறது. குறிப்பா இந்த படத்தில் ரகுமானின் இசையில் நானும் ஒரு பாடல் எழுதியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் தனுஷ்

No comments:

Post a Comment