இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது!
தமிழில் விஜய் நடித்த பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் உள்பட சில படங்களில் நடித்தவர் அஞ்சுஅரவிந்த். பின்னர் தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். அப்போது, அசீம் என்ற நபர், அஞ்சுஅரவிந்தின் இமெயில் முகவரியை எப்படியோ தெரிந்து கொண்டு அவரை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மெயில் அனுப்பினாராம். ஆனால், அஞ்சுஅரவிந்த் அவரை கடுமையாக எச்சரித்ததை அடுத்து மெயில் அனுப்புவதை நிறுத்தி விட்டாராம் அசீம்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த அசீம், அஞ்சுஅரவிந்த் பெயரில் பேஸ்புக் தொடங்கி அதில் மார்பிங் மூலம் அவரது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சுஅரவிந்த், கொச்சி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இநத அசீமை கைது செய்துள்ளனர்.
அப்போதுதான் அவர் ஏற்கனவே தன்னை கால்யாணம் செய்து கொள்ள விரும்பியதாக தகவல் அனுப்பிய விவரத்தை போலீசிடம் சொல்லியிருக்கிறார் அஞ்சுஅரவிந்த். இதையடுத்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அசீமை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளார்களாம்.
No comments:
Post a Comment