கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். அப்படத்தில் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு நல்ல ட்ரெய்னிங் கொடுத்து நடிக்க வைத்திருந்தனர். இருப்பினும் படம் தோற்றுப்போனதால் கெளதமின் நடிப்பு பேசப்படவில்லை. அதோடு, மணிரத்னத்தின் அறிமுகம் என்பதற்காக அவரை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க காத்து நின்ற சில இயக்குனர்களும் அவரது முதல் தோல்வி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடாது என்று ஓட்டம் பிடித்தனர்.
இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று மகனை தட்டிக்கொடுத்து வந்த கார்த்திக், அவருக்கான படவேட்டைகளிலும் தீவிரமடைந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.
கமர்சியல் காதல் கதையான இப்படத்தில் கெளதமுக்கு ஜோடியாக புத்தகம் படத்தில் நடித்த ரகுல் பரீத் சிங் நடிக்கிறார். கடந்த சில தினங்களாகவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்துக்காக தனது பழைய கெட்டப்பை மாற்றி தன்னை புதிய பாணிக்கு மெருகேற்றியுள்ளார் கெளதம்.
No comments:
Post a Comment