Search This Blog

Friday, 24 May 2013

சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்

சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்

Siddharth new comedy pair with Santhanam!


                                        காமெடி ட்ரேக் ரெடி பண்ணும் விசயத்தில் மற்ற காமெடியன்களை விட சந்தானம் கூடுதலாக மெனக்கெடுவார். அதிலும் தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் நடிக்கும் படமென்றால், தூங்காமல் உட்கார்ந்து காமெடி சீன்களை யோசிப்பார். அப்படி யோசித்தது தனக்கு நன்றாக இருப்பது போல் தெரிந்தால் உடனே அப்படத்தில் நடிக்கும் ஆர்யாவோ, சிம்புவோ, உதயநிதியோ யாராக இருந்தாலும் உடனே அவர்களுக்கு போன் போட்டு சீனை சொல்லுவார்.
அதைக்கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால் அந்த காட்சியை ஓ.கே செய்வார். இல்லையேல் ஓரங்கட்டி விடுவார். இதேபாணியில்தான் சித்தார்த்துடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காகவும் கடுமையாக மெனக்கெட்டுள்ளாராம் சந்தானம். சித்தார்த்தும் ஒரளவு காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால், இவர் சொல்லும் காட்சிகளுக்கு அவரும் தனது கருத்துக்களையும் உள்ளே திணிக்க, இப்படத்தில் எதிர்பார்த்ததைவிட சித்தார்த்-சந்தானத்தின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.
அதனால் தமிழில் நீண்டநாளைக்குப்பிறகு தான் நடித்த படம் ஒன்று அதிக நாள் ஓடப்போகிறது என்ற உற்சாகத்தில் இருக்கிறார் சித்தார்த். அதோடு, இனி தான் நடிக்கும் படங்களில் முடிந்தவரை சந்தானத்தையும் உள்ளே இழுத்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment