வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி
மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து ராம்கி கூறுகையில், நான் 65 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். திடீர் என்று சினிமாவை விட்டு விலகி இருந்தேன். சமீபத்தில் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பிரியாணி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மாசாணி படத்தின் கதை பிடித்ததால் இப்படத்திலும் நடிக்கிறேன். இனியா மாசாணி கேரக்டரில் வருகிறார். சாதியை காட்டி யாரையும் ஒதுக்க கூடாது என்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளது. சேலத்தை சுற்றி உள்ள மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனக்கு நல்ல கேரக்டர் காரைக்குடி, மதுரை, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வாய்மை என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன். கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன், என்றார்.
No comments:
Post a Comment