நடிகைகள் என் பெயரையும் பச்சை குத்த மாட்டார்களா! மன்சூரலிகானின் விபரீத ஆசை!!
தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நயன்தாரா நடித்த படம் கிரீக்கு வீருடு. இப்படம் லவ் ஸ்டோரி என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது. இவ்விழாவுக்கு படத்தில் நடித்தவர்கள் யாரும் வரவில்லை. மன்சூரலிகான் கலந்து கொண்டு சீ.டியை வெளியிட்டார்.
அதையடுத்து அவர் பேசும்போது, இந்த படத்தில் நயன்தாரா நாயகி என்பதால், அவரது கட்அவுட்டை நிறைய வைத்திருக்கிறார்கள். அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்று பச்சைக்குத்தியிருப்பதுகூட தெரிகிறது. பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது அவர் அந்த பெயரை தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டார். அவர் பச்சைக்குத்திய நேரம் பிரபுதேவாவும் இந்தியில் பெரிய இயக்குனராகி விட்டார். 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.
அதேபோல், என் பெயரையும் நடிகைகள் தங்களது உடம்பில் பச்சைக்குத்த வேண்டும். அந்த அதிர்ஷ்டத்தில் நானும் பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் என் பெயரை பச்சைக்குத்த எந்த நடிகையாவது முன்வருவார்களா? என்று தனது மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்தினார்
தங்களின் வருகைக்கு நன்றி
No comments:
Post a Comment