Search This Blog

Wednesday, 1 May 2013

நயன்தாராவின் கர்ப்பிணி வேடம்

நயன்தாராவின் கர்ப்பிணி வேடம

சேகர் கம்மூலாவின் இயக்கத்தில் இந்தி கஹானி ரீமேக் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் தொடங்கியது.
வித்யாபாலன் நடித்த க்ரைம் த்ரில்லர் கஹானி. வெளிநாட்டிலிருந்து கணவனைத்தேடி இந்தியா வரும் நிறைமாத கர்ப்பிணியாக கஹானியில் வித்யாபாலன் நடித்திருந்தார். அவர்தான் கதையின் நாயகி, நாயகன் எல்லாம். இந்தியில் சூப்பர்ஹிட்டான இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்குகிறார். வித்யாபாலன் நடித்த அனாமிகா வேடத்தை இருமொழிகளிலும் செய்பவர் நயன்தாரா.
கஹானியில் கதை நிகழும் இடமாக கொல்கத்தா காட்டப்பட்டது. சேகர் கம்மூலா அதனை ஹைதராபாத்தாக மாற்றியிருக்கிறார். ஏப்ரல் 28 இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ஹைதராபாத்தின் நெரிசலான வீதிகளில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. நிறைமாத கர்ப்பிணியாக இதில் நயன்தாரா நடித்தார்.
நயன்தாரா நடிக்கும் முதல் ஹீரோயின் ஓரியண்ட் க்ரைம் த்ரில்லர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

   தங்களின் வருகைக்கு நன்றி

No comments:

Post a Comment