Search This Blog

Sunday, 21 April 2013

விமான வேலையை உதறிய ஹீரோ

விமான வேலையை உதறிய ஹீரோ

சென்னை : சமீபத்தில் வெளியான ‘சிக்கி முக்கி’ படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஜித்தேஷ். தற்போது ‘தலக்கோணம்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தேன். கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தேன்.

அப்போது பெரிய விமான நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புகள் வந்தது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அதை தவிர்த்து விட்டேன். ஏகன், பேராண்மை படங்களில் சிறு கேரக்டரில் நடித்தேன். பிறகு ‘சிக்கி முக்கி’ வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ‘தலக்கோணம்’, ‘சர்க்கரை நிமிடங்கள்’ மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்.

No comments:

Post a Comment