Search This Blog

Sunday, 21 April 2013

இருவர் உள்ளம் என்ன கதை?

இருவர் உள்ளம் என்ன கதை?

4/20/2013 12:38:23 AM
சென்னை : ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி, இயக்கி, ஒளிப்பதிவு செய்யும் படம், ‘இருவர் உள்ளம்’. ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் எல்.சிவபாலன் தயாரிக்கிறார். வினய், பாயல் ராஜ்புத், அர்ச்சனா குப்தா, சத்யன் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ்.ஜி கூறியதாவது: அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான வினய்,  சாப்ட்வேர் என்ஜினீயர். அமெரிக்க கனவுடன் இந்தியாவில் வாழும் பாயல் ராஜ்புத்தை திருமணம் செய்கிறார்.

இருவரும் அமெரிக்க வாழ்க்கையை மேற்கொள்ளும்போது, பிரச்னைகள் ஏற்படுகிறது. அது எப்படி வாழ்வில் விரிசலை ஏற்படுத்துகிறது என்பது கதை. 60 நாட்கள் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சிவாஜி நடித்த ‘இருவர் உள்ளம்’ பட தலைப்பை அனுமதி பெற்று இதற்கு பயன்படுத்துகிறோம்.

No comments:

Post a Comment