Search This Blog

Monday, 29 April 2013

கத்தி சண்டை போட பயிற்சி பெற்ற அனுஷ்கா

கத்தி சண்டை போட பயிற்சி பெற்ற அனுஷ்கா

கத்தி சண்டை போடுவதற்கு அனுஷ்கா தயாராகிவிட்டார் என்றார் நடிகை அதிதி. ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ பட ஹீரோயின் அதிதி கூறியது: போர்க்குணம் கொண்ட இளவரசி ருத்ரம்மா தேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்கும் டோலிவுட் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது. இந்த சந்தோஷத்துக்கு மற்றொரு காரணம் அனுஷ்காவுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு. அனுஷ்கா யோகா டீச்சராக இருந்தபோதே எனக்கு பழக்கம். குதிரை ஏற்றப் பயிற்சி அவருக்கு சிறுவயது முதலே நன்கு தெரியும். ஆக்ஷன் காட்சிகளில் திறமையாக நடிப்பவர். வாள் சண்டை போடுவதற்கும் அனுஷ்கா பயிற்சி பெற்றிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இப்படத்துக்காக நானும் வாள் சண்டை பயிற்சி பெற உள்ளேன். தமிழில் நான் நடிக்கும் ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ முடிந்துவிட்டது. நடிகை ஆவதற்கு முன்பு இசைதான் என் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது. அது இப்போது மாறிவிட்டது.
  
           " கார்த்திக்விக்கி "
   தங்களின் வருகைக்கு நன்றி

No comments:

Post a Comment