Search This Blog

Saturday, 27 April 2013

கட்டாய திருமணத்தை தடுக்கும் ஹீரோ

கட்டாய திருமணத்தை தடுக்கும் ஹீரோ

மாமன் மகள் தேவயானி மீது உயிராக இருக்கிறார் ராஜகுமாரன். அவரை வேறொருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். மனம் உடைந்து சென்னை வரும் ராஜகுமாரன், நண்பன் ரமேஷ் கண்ணாவுடன் தங்குகிறார். அங்கு கீர்த்தி சாவ்லா, ராஜகுமாரனை காதலிக்கிறார். காதலை மறுக்கும் பெற்றோர்,

சாவ்லாவுக்கு கட்டாய திருமணம் செய்கிறார்கள். பொங்கி எழும் ராஜகுமாரன் கட்டாய திருமணத்தை பலாத்கார திருமணமாக கருதி, அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுக்கிறார். அவருக்கு சட்ட உதவி செய்ய வருகிறார் இன்னொரு தேவயானி. வழக்கு வென்றதா? அத்தை மகள் என்ன ஆனார்? கீர்த்தி சாவ்லா காதல் நிறைவேறியதா? என்பது படம் சொல்லும் கதை.

வழக்கறிஞர் தேவயானி கொழுகொழுவென்று அழகாக இருக்கிறார். அத்தை மகள் தேவயானி எதிர்மாறாய் இருக்கிறார். இந்த மாற்றமே படம் எடுக்கப்பட்ட காலஅளவை துல்லியமாகக் காட்டுகிறது. தேவயானியே தயாரிப்பாளராக இருப்பதாலோ என்னவோ முகத்திலும், நடிப்பிலும் அப்படி ஒரு தளர்ச்சி. வழக்கறிஞர் தேவயானி மிரட்டல், பக்கம் பக்கமான வசனம், பேசி ‘தட்ஸ் ஆல் யுவர் ஆனர்’ என்று முடிக்கும்போதெல்லாம் ‘விதி’ சுஜாதாவை நினைவுபடுத்துகிறார். அத்தை மகள் தேவயானி அய்யோ பாவம்.
ஓவர் மேக்கப்போடு வந்து மிரட்டுகிறார் ராஜகுமாரன். வசனத்தை இழுத்து இழுத்து பேசி நடிப்புன்னா கிலோ என்ன விலை என்று கேட்கிறார்.

 சண்டை காட்சிகளில் சட்டையை பின்னுக்கு இழுத்து விட்டு ஸ்டைல் பண்ணுகிறார். எம்.ஜி.ஆர், ரஜினி லெவலுக்கு அவரை ரமேஷ் கண்ணா பில்டப் பண்ணுவது தாங்க முடியவில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருக்கிறார். ராம்சிங்கின் ஒளிப்பதிவு பளிச். மாப்பிள்ளை மாறிப்போகும் காமெடியை இன்னும் எத்தனை படத்தில்தான் காட்டுவார்களோ தெரியவில்லை. மாறிவந்த மாப்பிள்ளையை தன் மாப்பிள்ளையாக நினைத்து காதலிக்கிறார் கீர்த்தி சாவ்லா. வீட்டுக்கு நடுவில் கோடுபோட்டு ‘நீங்க அந்தப் பக்கம், நான் இந்த பக்கம்‘ என்கிறார். திருணம் ஆனாலும் வீட்டு பால்கனியில் உட்கார்ந்து கொண்டு எதிர்வீட்டு காதலனோடு பேசுகிறார்.

அவர் பார்சல் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறார். வில்லன் வீடு தேடி வந்து கீர்த்தி சாவ்லா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்போகிறார். அதை ரமேஷ் கண்ணா, போனில் வீடியோ எடுத்து கோர்ட்டில் காட்டுகிறார். வயது முதிர்ந்த சாருஹாசன் காதலிக்காக 25 வருடமாக ஒரே இடத்தில் காத்திருக்கிறார். கதை இப்படியே போகிறதா? நாம் இருப்பது 2013 என்பதை மறந்து விட்டு பார்த்தால் ரசிக்கலாமோ என்னமோ?
, தினகரன் விமர்சனக்குழு.
கட்டாய திருமணத்தை

No comments:

Post a Comment