Search This Blog

Wednesday, 16 April 2014

ஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்!

ஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்!

சென்னை: மோகன்லால், விஜய் நடித்த ஜில்லா படத்தின் நூறாவது நாள் விழா நாளை மறுநாள் ஆல்பட் திரையரங்கில் நடக்கிறது.
இந்த விழாவில் படத்தின் நாயகர்கள் மோகன்லால், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜில்லா  
ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், ஆர் டி நேசன் இயக்கிய படம் ஜில்லா. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
இந்தப் படம் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்தது.
படத்தின் துவக்க வசூலி பிரமாத இருந்தாலும், படம் குறித்த கலவையான விமர்சனங்கள் படத்துக்கான ரசிகர்கள் கூட்டத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் தம் கூட்ட படத்தை ஓட்டி வந்தனர்.
பிவிஆர், பேபி ஆல்பட் ஆகிய இரண்டு அரங்குகளில் 50 நாள் வரை ஓடியதாக விளம்பரம் வெளியிட்டனர். ஆனால் அப்போது பிவிஆரில் விசாரித்தபோது விஜய் படம் ஓடவில்லை என்றனர்.
பின்னர் பேபி ஆல்பட்டில் மட்டும் ஒரு காட்சியாக ஜில்லா படம் 100 நாள் வரை ஓட்டப்பட்டது.
அதைக் கொண்டாடத்தான் இப்போது ஆல்பட் தியேட்டரில் பெரிய விழாவாக எடுக்கின்றனர்.

No comments:

Post a Comment