Search This Blog

Thursday, 20 March 2014

இந்தி நடிகையை கற்பழிக்க முயன்ற வாலிபருக்கு வலை வீச்சு

இந்தி நடிகையை கற்பழிக்க முயன்ற வாலிபருக்கு வலை வீச்சு

இந்தி நடிகை ரியா சக்கரபர்த்தியை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
‘சோனாலி கேபிள்' என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ரியா. டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.

இவர் கார் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டிற்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, பார்க்க நாகரீகமாகத் தெரிந்த இளைஞர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அந்த இளைஞர் நடிகை ரியா சக்கரபர்த்தியின் கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரியா சக்கரபர்த்தி சத்தம் போட்டபடி அந்த நபரை காலால் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி ட்விட்டரில், "நான் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கட்டடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. என்னை மானபங்கம் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment