சிம்புவின் சொந்தப் படத்தில் சந்தானத்துக்கு கல்தா : ‘பரோட்டா’ சூரிக்காக பாண்டிராஜ் செய்த ராஜதந்திரம்?
ஒரு குறிப்பிட்ட காமெடியனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட்டாகி விட்டால் எந்த மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு காமெடியனைத் தேடிப் போக மாட்டார்.
விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’வில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானத்தை தனது ‘காதல் அழிவதில்லை’ படத்தின் ஃப்ரெண்டு கேரக்டரில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. தொடர்ந்து தான் ஹீரோவாக நடிக்கும் எல்லாப் படங்களிலும் ஒரு கேரக்டரை சந்தானத்துக்காக புக் பண்ணி அவரை கூடவே கூட்டிச் சென்றார். அப்படியே பிக்கப் ஆகி இப்போது தமிழ்சினிமாவில் நம்பர் ஒன் காமெடியனாகி விட்டார்.
இப்படி சந்தானத்துடன் கெமிஸ்ட் ஒர்க்-அவுட் ஆகிவிட்ட சிம்புவை பரோட்டோ சூரியுடன் நடிக்கச் சொன்னால் நடிப்பாரா சிம்பு? ஆனால் இப்போது நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சிம்புவின் சொந்தப் படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். இதில் காமெடிக்கு ‘பரோட்டா’ சூரியை கமிட் செய்ய திட்டமிட்ட பாண்டிராஜ் அவரை மனதில் வைத்தே காமெடி ட்ராக்கையும் எழுதியிருக்கிறார். அந்த வேலை முடிந்த கையோடு விஷயத்தை சிம்புவிடம் சொல்ல, அவரோ நானும் சந்தானமும் சேர்ந்து நடிச்ச படங்கள் எல்லாமே செண்டிமெண்ட்டா ஹிட்டாகியிருக்கு. அதனால அவரையே காமெடிக்கு போட்டுடுங்க சூரி வேணாம் என்று கண்டிஷனாக சொன்னாராம்.
ஆனால் பாண்டிராஜோ ஸாரி… ஜி நான் சூரியை மனசுல வெச்சுத்தான் இந்தப் படத்துல காமெடி ட்ராக்கை எழுதியிருக்கேன். இப்போ அவரை மாத்தினா காமெடி ட்ராக் சொதப்பலாயிடும் என்று கூலாகச் சொல்ல, சிம்புவும் எடுப்பது சொந்தப்படம் என்பதால் வேறு வழியில்லாமல் சந்தானத்தை கழட்டி விட்டு சூரிக்கு ஓ.கே சொன்னாராம்.
No comments:
Post a Comment