கோவை பெண்ணை மணந்தார் நடிகர் கிருஷ்ணா
கோவை: கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணா கோவையைச் சேர்ந்த கைவல்யாவை இன்று மணந்தார்.
கழுகு படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளரான பட்டியல் சேகரின் மகன் தான் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தன் கிருஷ்ணாவின் அண்ணன் ஆவார்.
கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இன்று கோவையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பெரியோர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இருவீட்டாரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனது நண்பன் கிருஷ்ணாவுக்கு திருமணம் முடிந்த செய்தியை நடிகர் அதர்வா முரளி ஃபேஸ்புக்கில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணா-கைவல்யாவின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment