Search This Blog

Monday, 10 February 2014

'அஞ்சான்’ படப்பிடிப்பில் கலாட்டா : சம்பளத்தில் ‘கை’ வைத்ததாக லிங்குசாமி தம்பி மீது பரபரப்பு புகார்!

'அஞ்சான்’ படப்பிடிப்பில் கலாட்டா : சம்பளத்தில் ‘கை’ வைத்ததாக லிங்குசாமி தம்பி மீது பரபரப்பு புகார்!

சூர்யாவின் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பில் கலாட்டா ஏற்பட்டதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கம் 2 ஹிட்டுக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். சைலண்ட்டாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் ஒரு பாடல்காட்சிக்காக அஞ்சானின் மொத்த டீமும் மும்பையிலுள்ள புனே ஏரியாவுக்குச் சென்றது.

சென்னையில் இருந்து ராஜுசுந்தரம் தலைமையில் டான்ஸ் மாஸ்டர்கள் சென்றனர். வழக்கமாக தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது, அந்தந்த மாநிலத்தை சேர்ந்த சினிமா கலைஞர்களில் 30 சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும் என்பது தான் விதி.

தமிழகத்தில் இருந்து செல்லும் கலைஞர்கள் 70 சதவீதம் பேர் பணியாற்றலாம். அஞ்சான் படத்தின் பாடல் காட்சியில், சென்னையை சேர்ந்த நடன கலைஞர்கள் 100 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதையறிந்த மும்பையிலுள்ள சினிமா நடன கலைஞர்கள், புனேயில் சூர்யா, சமந்தா பங்கேற்ற படப்பிடிப்புக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

30 சதவீதம் பேரை ஏன் பயன்படுத்தவில்லை? என்று கேட்டு பிரச்னை செய்தனர். இதையடுத்து 4 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு பாடல் காட்சியில் தங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தாததால், தங்கள் சங்கத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று மும்பை நடன கலைஞர்கள் கேட்டார்கள்.

உடனே ‘அஞ்சான்’ படத் தயாரிப்பாளரும், டைரக்டர் லிங்குசாமியின் தம்பியுமான போஸ் அபராதத்தொகை 60 ஆயிரம் ரூபாயைக் கட்டினார். இதையடுத்து பிரச்னை அங்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

ஆனால், பிறகு போஸ் செய்ததைக் கேள்விப்பட்டதும் தான் தமிழ்சினிமா நடனக் கலைஞர்கள் டென்ஷனாகி விட்டார்கள்.

என்ன செய்தார் போஸ்?

மும்பையில் பிடித்த 60 ஆயிரம் அபராத தொகையை சென்னை நடன கலைஞர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொண்டாராம். இதனால் கடுப்பான அவர்கள் பெப்சியில் அவர்மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment