Search This Blog

Friday, 14 February 2014

பாவனா காதலிக்கும் அந்த பிரபலம் யார்?

பாவனா காதலிக்கும் அந்த பிரபலம் யார்?

நடிகை பாவனா சினிமா பிரபலம் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாவனா. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ‘வெயில்’, ‘ஜெயம்கொண்டான்’, ‘தீபாவளி’, ‘அசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் தமிழில் நடித்த படம் அசல்.

ஆனால் அவருக்கு இங்கு எதிர்பார்த்த வாய்ப்பு எதுவும் அமையவில்லை. இந்நிலையில்தான் பாவனா மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். மலையாளத்தில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் பாவனா காதலர் தினத்தினமான இன்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அவர், சினிமா பிரபல ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறாராம். இந்த வருட இறுதிக்குள் அவரை திருமணம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாரம். பாவனாவின் காதலர் அனைவருக்கும் தெரிந்தவராம்.

இருந்தாலும் அவர் யார் என்பதை தற்போதைக்கு சொல்ல விரும்பவில்லையாம். மேலும் பாவனா, தங்களது திருமணம் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாவனாவை மணக்க இருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும்?

No comments:

Post a Comment