விஜய்யை வைத்து படம் எடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்…! பினாமியை வைத்து சொந்தப்படம் எடுக்கும் விஜய்…!
அஜித்தின் வீரம் படம் சூப்பர்….! விஜய்யின் ஜில்லா படம் வேஸ்ட்..! என்பதே மக்கள் என்கிற மகேசனின் தீர்ப்பாக இருக்கிறது.
ஆனாலும் விஜய் தரப்பு ஜில்லா படத்தை வெற்றிப்படமாகக் காட்ட ஏகப்பட்ட ஸ்டண்ட்களை அடித்துக் கொண்டிருக்கிறது.
ஜில்லா படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிய கேரளத்து விநியோகஸ்தரை கூட்டிவந்து மீடியாக்களின் முன் நிறுத்தி, ‘ஜில்லா படம் வெற்றி’ என்று மலையாளம் கலந்த தமிழில் கள்ளம் பறைய (பொய் சொல்ல) வைத்தார்கள்.
அதுமட்டுமல்ல, துப்பாக்கி படத்தின் வசூலையே ஜில்லா படத்தின் வசூல் முறியடித்துவிட்டது என்றும் கூசாமல் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜில்லா படம் வெற்றி என்றால் விஜய்யை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் அல்லவா?
விஜய்யை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என்பதே உண்மை!
தொடர்ந்து விஜய் தோல்விப்படங்களை கொடுத்தது மட்டும் காரணமில்லை, விஜய்யை வைத்து படம் எடுப்பது பெரிய ரிஸ்க் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வும் ஒரு காரணம்.
அவரை வைத்து படம் எடுத்தால் சுமார் இருபது கோடி வரை லாபம் சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அதேஅளவுக்கு, போட்ட முதலீட்டை தொலைத்துவிட்டு தெருவுக்குப் போகக் கூடிய ரிஸ்க்கும் இருக்கிறது – தலைவா படத்தின் தயாரிப்பாளரைப் போல்.
விஜய் தன் மீது அரசியல் சாயத்தை அள்ளி பூசிக்கொண்டுவிட்டதால் அவரது படத்தை தமிழ்நாட்டில் கண்கொத்தி பாம்புபோல் கண்காணிக்கிறது ஆளும்கட்சி.
அவரது படத்தில் சின்னதாக பன்ச் டயலாக் பேசினாலும் படத்தை பஞ்சராக்கக் காத்திருக்கிறது.
இப்படியொரு சூழல் நிலவுவதால் விஜய்யை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி-2 படத்தில் நடிக்க உள்ள விஜய், அதற்கடுத்து நடிக்க திட்டமிட்டுள்ள புதிய படத்துக்கு அவர் எதிர்பார்த்ததுபோல் தயாரிப்பாளர் வரவில்லை.
எனவே தன் பி.ஆர்.ஓ.வை பினாமியாக வைத்து விஜய்யே அந்தப் படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
No comments:
Post a Comment