ரசிகர்கள் மோதலில் அஜீத் வாய் திறக்காததற்கு காரணம் என்ன? இதுதான்!
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜீத் ரசிகர்கள் நேரடியாகவே மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். “சண்டை போடாதீங்க” என்று அடிக்கடி விஜய் வந்து அதே சமூக வலைத் தளப் பக்கங்களில் கெஞ்சிக் கொண்டிருக்க, மற்றொரு போட்டியாளரான அஜீத் மட்டும் வாயை திறக்கவேயில்லை.
அப்படின்னா சண்டை போடுங்க என்று அர்த்தமா? என்று கேட்க வேண்டாம். “மன்றத்தையே கலைத்து விட்டோம். இந்த விஷயத்தில் கருத்து சொன்னால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு ரசிகர்கள் வீட்டு முன்னால் கூடிவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்துதான் அறிக்கை கிடையாது என்று கூறிவிட்டாராம் அஜீத்.
சண்டையில சட்டை கிழியறது சகஜம்ங்கிற கொள்கையாகவும் இருக்கலாம். ஆனாலும் அறிக்கை வெளியிடுமாறு திரையுலக நண்பர்கள் அஜீத்தை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். மனிதர் மனம் மாறுவாரா? என்பது விரைவில் தெரியவரும்.
No comments:
Post a Comment