Search This Blog

Thursday, 23 January 2014

கௌதம் வாசுதேவ் மேனனை காப்பாற்ற நாட்டாமையாக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்!

கௌதம் வாசுதேவ் மேனனை காப்பாற்ற நாட்டாமையாக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்!

தங்களுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீது தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் மோசடி வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன், கௌதம் வாசுதேவ் மேனனை விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் உத்தரவினால் சுறுசுறுப்பான காவல்துறை, வேறு வழியில்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் மீதான புகாரை தூசுத்தட்டி எடுத்ததோடு, புகாரில் முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீது எப்.ஐ.ஆர்.போட்டிருக்கிறது.

எனவே, எந்த நேரத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் கைது செய்யப்படலாம் என்பதே தற்போதைய நிலவரம்.

இந்நிலையில்….தன்னை கைது செய்வதை தவிர்க்கவும், தடுக்கவும், சிறை செல்வதிலிருந்து தப்பிக்கவும் தீவிர முயற்சிகளை செய்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லை என்பதால், திரைமறைவில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

அதாவது, தன் மீது புகார் கொடுத்த எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரிடமும் சமரசம் பேசி, புகாரை வாபஸ் வாங்க வைக்கும்படி பேச்சு வார்த்தை நடத்த முயன்றார்.

எல்ரெட் குமார், ஜெயராமன் இருவருமே கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேசவே தயாராக இல்லை.

தங்களை ஏமாற்றிய அவரை ஜெயிலில் அடைக்காமல் ஓய மாட்டோம் என்று கொலவெறியில் இருக்கிறார்கள். எனவே அவர்களை சமாதனப்படுத்தி, சமரசத்துக்கு உடன்பட வைக்கும் பொறுப்பை ‘பழைய நாட்டாமை’ சரத்குமாரிடமும், ‘புதிய நாட்டாமை’ ஹாரிஸ் ஜெயராஜிடமும் ஒப்படைத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

நண்பருக்காக நாட்டாமை பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், எல்ரெட் குமார், ஜெயராமன் இருவருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் தர வேண்டிய பணத்தை தானே தருவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் கைதாகி புழல் ஜெயிலில் களி சாப்பிடுவதும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து பீட்சா சாப்பிடுவதும், எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரது முடிவில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment