Search This Blog

Tuesday, 28 January 2014

படப்பிடிப்பு தளத்தில் பகிரங்கமாக தண்ணி அடிக்கும் கதாநாயக நடிகர்…!

படப்பிடிப்பு தளத்தில் பகிரங்கமாக தண்ணி அடிக்கும் கதாநாயக நடிகர்…!

நடிகர்களில் இன்று எவரும் எம்.ஜி.ஆர். இல்லை…!

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சிகரட், மதுப்பழக்கம் இல்லாத மனிதராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இன்றைய கதாநாயக நடிகர்களில் (நடிகைகளிலும்தான்) அப்படிப்பட்ட கேரக்டரை பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்.

99 சதவிகித ஹீரோக்கள் சரக்கடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இருந்து தொலையட்டும்..

சீக்கிரமே செத்தும் தொலையட்டும்…

இவர்களை திருத்தவே முடியாது என்றோ….

அல்லது, சரக்கடிப்பது அவர்களின் சொந்த விஷயம் என்றோ இருந்துவிடலாம்தான்.

ஆனால் ஜீவா சரக்கடிப்பதை இப்படி எடுத்துக்கொண்டுவிட முடியாது.

காரணம்..அவர் படப்பிடிப்பு தளத்தில், ஷாட் கேப்பில் பகிரங்கமாக சரக்கடிக்கிறார்.

இப்படியொரு தப்பை தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறார் ஜீவா.

‘மச்சி.. ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ என்று இவர் பேசிய சினிமா டயலாக்தான் டாஸ்மாக் பார்களில் குடிமகன்களின்கீதமாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் குடிகாரனாக நடித்தபோது குவார்ட்டர் சொல்லச் சொன்ன ஜீவா, நிஜத்தில் எப்படி சரக்கடிக்கிறார் தெரியுமா?

பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரு காபி கப்பில் சரக்கை ஊற்றி, சூடான கிரீன் டீயை குடிப்பது போல் ஊதி ஊதி குடிக்கிறார்.

பார்ப்பவர்களுக்கு ஸார் கிரீன் டீ குடிப்பது போல் தெரியும்.

கப்பில் இருப்பதோ ஃபாரின் சரக்கு.

இப்படியாக சில ரவுண்டுகளை ஏற்றிய பிறகு, நடிப்பிலும் அநியாயத்துக்கு சொதப்புகிறாராம்.

ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி இயக்குநர்களையும் டென்ஷனாக்குகிறாராம்.

போதை அதிகமாகி ஒருவேளை ஜீவா மட்டையாகிவிட்டால், அன்றைக்கு படப்பிடிப்பு நடக்காது.

படப்பிடிப்பு ரத்தானால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டமாகும் என்பதை எல்லாம் ஒரு தயாரிப்பாளரின் மகனான ஜீவாவுக்கு தெரியாமல் போனது எப்படி?

ஆர்.பி.சௌத்ரி ஸார்…பையனுக்கு புத்திச் சொல்லிப் புரிய வையுங்க!

No comments:

Post a Comment