Search This Blog

Friday, 17 January 2014

‘வீரம்’ படம் ஹிட்டாக காரணம் என்ன?

‘வீரம்’ படம் ஹிட்டாக காரணம் என்ன?

அஜீத்தின் வீரம் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடக் காரணம் என்ன என்று தெரியுமா? பொங்கலுக்கு கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் ஒரு படத்தின் வசூலை மற்றொன்று பாதிக்கவில்லை. இந்நிலையில் வீரம் படம் வசூலை அள்ளுவதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

தல ஆரம்பம் படத்தை போன்று வீரம் படமும் ‘தல’ ஷோ தான். வீரம் வெற்றிக்கு அஜீத் தான் முக்கிய காரணம். அவர் திரையில் வரும்போது அரங்கத்தில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.

மாஸ் வீரம் குடும்ப படமாக இருந்தாலும் மாஸ் படமாகும். இதை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்த அஜீத் ரசிகர்கள் வீரம் மரண மாஸ் படம் என்று சந்தோஷமாக தெரிவித்து வருகின்றனர்.

குடும்பம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அனைத்து அம்சங்களும் வீரம் படத்தில் உள்ளன. அதனால் வீரம் படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.

சந்தானம் என்ன தான் அஜீத் படத்தில் இருந்தாலும் காமெடியும் வேண்டும் ரசிகர்களை குஷிபடுத்த. வீரம் படத்தில் காமெடியில் கலக்கி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் சந்தானம்.

சரியான கலவை வீரம் படத்தில் பாசம், காதல், ஆக்ஷன், மாஸ், காமெடி என்று எல்லா அம்சங்களும் சரியான அளவில் உள்ளது படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்க காரணமாகும்.

No comments:

Post a Comment