Search This Blog

Thursday, 9 January 2014

சீனா போகிறார் வடிவேலு!

சீனா போகிறார் வடிவேலு!

தான் நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் படிப்பிடிப்புக்காக சீனா செல்கிறார் நடிகர் வடிவேலு.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் "ஜெகஜால புஜபல தெனாலிராமன்" படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

90 சதவீத படிப்பிடிப்பை தமிழகத்தில் எடுத்து முடித்திருக்கும் படக்குழு, மீதியுள்ள 10 சதவீத காட்சிகளை சீனா மற்றும் ஆந்திராவில் எடுக்கப் போகிறார்களாம்.
இதற்காக இம்மாத இறுதியில் சீனா செல்லும் படக்குழு, அங்கு ஒரு வாரம் தங்கி ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் குழுவுடன் வடிவேலு மற்றும் கதாநாயகியும் செல்கிறார்கள்.
"ஜெகஜால புஜபல தெனாலிராமன்" படம் ஒரு வராலற்று படமாகும். வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டு படபிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
யுவராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment