Search This Blog

Friday, 3 January 2014

சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா

சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா

சென்னை: படப்பிடிப்புகளுக்கு வந்து தனக்கு சிம்பு தொந்தரவு கொடுப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம்.
சிம்பு நயன்தாராவை காதலித்த காலத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். நயன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் சிம்பு பறந்துவிடுவார். இந்நிலையில் ஹன்சிகா விஷயத்தில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

ஹன்சிகா  
சிம்புவுக்கு ஹன்சிகாவை தினமும் பார்க்க ஆசையாம். ஆனால் ஹன்சியோ அவரை தினமும் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லையாம். சிம்பு தனது பிசியான படப்பிடிப்புகளுக்கு வருவதை ஹன்சிகா விரும்பவில்லை போன்று. அதனால் உள்ளூரில் படப்பிடிப்பு நடந்தால் அம்மணி போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். வெளியூரில் படப்பிடிப்பு நடந்தால் எங்கு நடக்கிறது என்பதை சிம்புவுக்கு தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.
இப்படி ஹன்சிகா தான் இருக்கும் இடத்தின் விவரங்களை கூறாமல் இருப்பதால் சிம்பு அவர் நடிக்கும் பட நிறுவனங்களை அணுகி விவரங்களை வாங்கிச் சென்று ஹன்சிகாவை சந்திக்கிறாராம்.
ஹன்சிகா புத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடினார். ஹன்சிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல சிம்பு அமெரிக்கா பறந்ததாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment