Search This Blog

Sunday, 19 January 2014

ஜெய்யை வைத்து படம் எடுக்க வேண்டாம்..! – ஏ.ஆர்.முருகதாஸ் வேண்டுகோள்…!

ஜெய்யை வைத்து படம் எடுக்க வேண்டாம்..! – ஏ.ஆர்.முருகதாஸ் வேண்டுகோள்…!

எந்த வம்பு தும்புக்கும் போகாத மனுஷன் என்று திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பெயர் உண்டு. அப்பேற்பட்டவரையே ஆத்திரப்படுத்திவிட்டிருக்கிறார் ஜெய்.

சென்னை 600028, சுப்பிரமணியபுரம் வெற்றிப்படங்களில் நடித்த பிறகும் சரியான பட வாய்ப்பு இல்லாமல், அந்த விரக்தியிலேயே தினமும் சரக்கடித்துக் கொண்டு இருந்த ஜெய்க்கு, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினால்தான் பிரேக் கிடைத்தது.

அடுத்து தயாரித்த ராஜாராணி படத்திலும் ஜெய்க்கு வாய்ப்பு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தின் விளம்பரங்களில் ஆர்யாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தினால் கடுப்பான ஜெய், படப்பிடிப்பில் பிரச்சனை, பப்ளிசிட்டிக்கு ஒத்துழையாமை என ஏ.ஆர்.முருகதாஸுக்குசெமத்தியாய் குடைச்சல் கொடுத்தார்.

ராஜாராணி படத்தின் இசைவெளியீட்டுவிழாவிலேயே தன் மனக்குமுறலை கொட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அப்படியும் ஜெய் மீதான அவரது ஆத்திரம் அடங்கவில்லை.

ராஜாராணி படம் வெளியாகி பல மாதங்களான பிறகும் அதில் நடித்தபோது ஜெய் கொடுத்த குடைச்சலை ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது.

‘நாம் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியினால் முன்னணி ஹீரோவான ஜெய், நமக்கே டார்ச்சர் கொடுத்துவிட்டாரே’ – என்ற கடுப்பில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜெய்யைப் போட்டுத்தாக்குகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு படவிழாவில் பேசும்போது கூட, ‘நம்மால் வளர்ந்தவர்கள் வளர்ந்துவிட்ட பிறகு நன்றியை மறந்துவிடுகிறார்கள்’ என்று மறைமுகமாக ஜெய்யைத் தாக்கினார்.

மேடைகளிலேயே ஜெய் மீது இப்படி தாக்குதல் நடத்தும் ஏ.ஆர்.முருகதாஸ், தனக்கு நெருக்கமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் தனிப்பட்டமுறையிலும் ஜெய்யை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறாராம்.

சாதுமிரண்டால் என்பது சரியாகத்தான் இருக்கிறது..!

No comments:

Post a Comment