ஜில்லா படத்தை ஓட வைக்க சீப்பான பப்ளிசிட்டியில் இறங்கிய விஜய்!
சினிமாக்காரர்கள் மக்களை முட்டாள்களாக்குவதையே தொழிலாக செய்து வருபவர்கள்.
சமீபகாலமாக, மற்றொரு விஷயத்திலும் மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
படம் வெளியான அடுத்தநாளே…சக்ஸஸ் மீட் என்ற பெயரில் அத்தனை மீடியாவையும் அழைத்து, படம் சூப்பர்ஹிட் என்று பொய் சொல்வதுதான் அது…!
அவர்கள் சொல்லும் அண்டப்புளுகை ஆராயாமல் பத்திரிகைகள் அந்த செய்திகளை வெளியிடும். தொலைக்காட்சிகளும் அவர்களின் பொய்யுரையை ஒளிபரப்பும்.
படத்தை ஓட வைக்க புரமோஷன் என்ற பெயரில் இவர்கள் சொல்லும் பொய்களை, பொய் என்று தெரியாமல், உண்மை என்று நம்பும் அப்பாவி ரசிகன், படம் ஹிட்டுன்னு சொல்றாங்களே…. அப்படீன்னா படம் நல்லாருக்கும் போலருக்கே என்று தியேட்டருக்கு வந்து…..ஏமாந்து போவான்.
இப்படி ஒரு ஏமாற்று வேலையை செய்யும் சினிமாக்காரர்களில் நாளைய முதல்வர், நாளைய பிரதமர், நாளைய அமெரிக்க அதிபர் விஜய்யும் அடக்கம்!
ஜில்லா படம் வெளியாகி, அதன் தலை எழுத்தை…அதாவது படம் தேறாது என்று… மக்கள் தெள்ளத்தெளிவாக எழுதிவிட்டார்கள்.
இந்நிலையில் இன்று சக்ஸஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்து, மீடியாக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் விஜய்.
அங்கே வரும் மீடியாக்களிடம் வழக்கம்போல் ஜில்லா படம் சூப்பர்ஹிட்…! என்று சூப்பர் பொய்யைச் சொல்லப்போகிறார் விஜய்.
நாம் சொல்லும் அண்டப்புளுகு மீடியாக்களின் மூலம் பரபரப்பான செய்தியாக மக்களை சென்று அடையும்.
அச்செய்திகளை நம்பி அப்பாவி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.
ஜில்லா படத்தின் வசூல் உயரும் என்று கணக்குப் போட்டிருக்கிறார் விஜய்.
மக்களே தலையைக் காட்டுங்க….மிளகாய் அரைக்க அதோ விஜய் வர்றாரு பாருங்க..!
No comments:
Post a Comment