14ம் ஆண்டும் சிறப்பாக ஆண்டாக இருக்கும் : பரோட்டா சூரி நம்பிக்கை!
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர், விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் காமெடியன் ஆனார். முக்கியமாக அந்த படத்தில் சூரியின் நடிப்பைப்பார்த்து விட்டு யார் அந்த புது பையன் என்று கேட்ட விஜய், அவரை அழைத்து பின்னர் விசாரித்தாராம். கூடவே, பர்பாமென்ஸ் நன்றாக உள்ளது என்றும் பாராட்டினாராம்.
அது எனக்கு மிகப்பெரிய எனர்ஜியாக இருந்தது என்று அப்போது சொல்லி வந்த சூரியின் மார்க்கெட் அதன்பிறகு படிப்படியாக சூடு பிடித்து விட்டது. இப்போது சந்தானத்துக்கு அடுத்த லெவல் காமெடியனாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். விமல், விதார்த், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி உள்பட வளர்ந்து கொண்டிருக்கும் பல ஹீரோக்களின் ஆஸ்தான காமெடியனாகி விட்டார்.
அதேசமயம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அவ்வப்போது நடிக்கிறார். பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா படத்திலும் நடித்திருந்தார் சூரி. அதனால் 2014 தொடக்கமே எனக்கு உற்சாகமாக உள்ளது என்று சொல்லும் சூரி, கடந்த 2013ம் வருடம் தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஹிட் படங்களில் நடித்த எனக்கு, இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜில்லா ஹிட் படம் கிடைத்திருப்பது இந்த ஆண்டின் ஆரம்பத்தை அமர்க்களப்படுத்தி விட்டது. அதனால் 2013ஐ போன்று 2014ம் ஆண்டும் சிறப்பாக ஆண்டாக இருக்கும் என்று தெரிந்து விட்டது என்று சொல்லும் சூரி, அடுத்தபடியாக விதார்த்துக்கு இணையாக நடித்துள்ள பட்டைய கெளப்பனும் பாண்டியா படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறாராம்.
No comments:
Post a Comment