Search This Blog

Friday, 10 January 2014

ஜில்லா படத்தின் நீளம் குறைப்பு- 10 நிமிட காட்சிகள் கட்!

ஜில்லா படத்தின் நீளம் குறைப்பு- 10 நிமிட காட்சிகள் கட்!

விஜய்யின் ஜில்லா படத்தில் 10 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி படமான ஜில்லா 2 மணி 55 நிமிட நேரம் ஓடுகிறது.
இது படத்தின் வெற்றியைப் பாதிக்கும் அளவுக்கு உள்ளதாகவும், விறுவிறுப்பைக் குறைப்பதாகவும் ரசிகர்கள், நண்பர்கள கருத்து தெரிவித்தனர்.

ஜில்லா படங்கள்  
முக்கியமாக விமர்சனங்கள் அனைத்திலுமே படத்தின் நீளம்தான் முக்கிய குறையாக முன் வைக்கப்பட்டது.
தேவையில்லாத காட்சிகளைக் குறைத்து விறுவிறுப்பாக்கியிருந்தால் படத்தின் லாஜிக் மிஸ்டேக் பெரிதாக தெரியாது என கருத்துக் கூறியிருந்தனர்.
எனவே படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.
இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, இன்னும் கூட 20 நிமிட காட்சிகளை, இரண்டு பாடல்களை பாரபட்சமின்றி குறைக்கலாம்!

No comments:

Post a Comment