பிப்ரவரி 03 முதல் விஜய், முருகதாஸ் படம்
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 03 ஆம் தேதி தொடங்குகிறது.
தீனா, ரமணா, கஜினி, ஹிந்தி கஜினி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து வந்த முருகதாஸின் ஓட்டத்தை 7 ஆம் அறிவு சின்னதாக தடை செய்தது. அதிலிருந்து துப்பாக்கி என்ற சூப்பர்ஹிட்டுடன் மீண்டும் வெற்றி ஓட்டத்தை தொடங்கியவர் ஹிந்தியில் துப்பாக்கியை ஹாலிடே – ஏ சோல்ட்ஜர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார். இந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தது போல் விஜய் நடிக்கும் படத்தை ஆரம்பிக்கிறார். பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. ஐங்கரன் தயாரிக்கிறது, அனிருத் இசை, ஒளிப்பதிவு ஜார்ஜ; வில்லியம்ஸ் என சில விஷயங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோயின் யார் என்ற கேள்வியில் சமந்தா, ப்ரியங்கா சோப்ரா இருவரும் ஊசலாடுகிறார்கள்.
இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம் கிடையாது. ஆனால் துப்பாக்கி போலவே ப்ளாக் பஸ்டராகும் என்று கூறியிருக்கிறார் முருகதாஸ்.
No comments:
Post a Comment