Search This Blog

Monday, 9 December 2013

டிசம்பரில் ‘நிமிர்ந்து நில்’ கீதம்

டிசம்பரில் ‘நிமிர்ந்து நில்’ கீதம்

பிரம்மாண்ட இசைக் கச்சேரிக்கு தயாராகியுள்ளது ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்.

ஆதிபகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இதில் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சரத்குமார், சூரி, கோபிநாத், சுப்பு பஞ்சு, படவா கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டை வருகிற டிசம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ஸ்ரீநிவாசன்.

இப்படம் தெலுங்கில் ‘ஜன்டாபாய் கபிராஜு’ எனும் பெயரில் உருவாகியுள்ளது. இதில் ரவிக்கு பதிலாக நாணி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment