Search This Blog

Monday, 30 December 2013

மீராவின் காதல் முறிந்தது ஏன்? பரபரப்பு தகவல்

மீராவின் காதல் முறிந்தது ஏன்? பரபரப்பு தகவல்

காதலர் மாண்டலின் ராஜேஷை கைவிட்டு, துபாய் இன்ஜினியரை மணக்க உள்ளார் மீரா ஜாஸ்மின். அவரது காதல் முறிவுக்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. மீரா ஜாஸ்மின் – மாண்டலின் ராஜேஷ் தீவிரமாக ஒருவரை ஒருவர் காதலித்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களது காதல் தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இப்போது திடீரென துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ள கேரளாவை சேர்ந்த அனில் ஜான் டைட்டசை திருமணம் செய்ய உள்ளார் மீரா. குடும்பத்தார் பார்த்து நிச்சயித்த இந்த திருமணம், பிப்ரவரி 21ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.

மீரா, மாண்டலின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே மாண்டலின் குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி மீராவை திருமணம் செய்ய மாண்டலின் ஒப்புக்கொள்ளவில்லையாம். திருமணத்துக்கு மீரா வற்புறுத்தியபோதெல்லாம் அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளார் மாண்டலின். ஒரு கட்டத்துக்கு பிறகு பொறுமை இழந்த மீரா, மாண்டலினை பிரிய முடிவு செய்தார். திருமணம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் இவர்களின் காதல் முடிவுக்கு வந்திருக்கிறது.

காதல் முறிந்ததால் திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன்தான் மீரா இருந்துள்ளார். குடும்பத்தாரும் மீராவுக்கு நெருங்கிய சினிமா நண்பர்களும் அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க பல மாதங்களாக முயன்று வந்தனர். அதற்கு இப்போது நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது.

No comments:

Post a Comment