Search This Blog

Wednesday, 25 December 2013

கிளாமர் டிரஸ் போடப்போகிறாராம் லட்சுமிமேனன்!

கிளாமர் டிரஸ் போடப்போகிறாராம் லட்சுமிமேனன்!

என்னதான் கிராமத்து கதைகளில் உசிரக்கொடுத்து நடித்தாலும், அந்த நடிகைகளை மூன்றாம்தர பட்டியலில்தான் வைத்திருப்பார்கள் படாதிபதிகள். அதேபோல், சிட்டி சப்ஜெக்டுகளில் தொடை தட்டிக்கொண்டு வரும் நடிகைகளுக்கு முதல் படத்திலேயே ஏ கிரேடு கொடுத்து உச்சாணியில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

இந்த சூட்சுமத்தை ஆரம்பத்தில் அறிந்து கொள்ளவில்லை லட்சுமிமேனன். திறமை காட்டும் நடிகைகளுக்குத்தான் எப்போதுமே மவுசு என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தவர், கிராமத்து கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால், அப்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டானபோதும், அவரது படக்கூலி இன்னமும் அடி மட்டத்திலேயே உள்ளதாம்

அதேசமயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரியான ஸ்ரீதிவ்யா, ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில், கிட்டத்தட்ட லட்சுமிமேனனின் படக்கூலியை நெருங்கி விட்டாராம். கைவசமிருக்கும் பென்சில், ஈட்டி படங்கள் வெளிவரும்போது, லட்சுமிமேனனை விட டபுள் மடங்கு படக்கூலியை தொட்டுவிடுவார் என் தெரிகிறது.

இந்த விசயத்தை கேள்விப்பட்டதில் இருந்து மனசொடிந்து போயிருக்கிறாராம் லட்சுமிமேனன். கிராமத்து கதைகளில் குடும்ப நடிகையாக நடித்தால் நல்ல மரியாதை கிடைக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால், நல்ல நடிகை என்ற வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது. திறமைக்கேற்ற கூலியும் கிடைக்க வேண்டுமல்லவா? என்று இப்போது பீல் பண்ணுகிறாராம்.

இதையடுத்து, இதுவரை நடந்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லதாக இருக்கட்டும் என்று, தனது அக்மார்க் முத்திரையான பாவாடை தாவணி, சேலை காஸ்டியூமை ஓரங்கட்டி விட்டு கிளாமர் டிரஸ் போடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

ஆனால், அதற்கு, உடம்பிலும் கிளாமர் வேண்டுமே? என்று சுற்றியிருப்பவர்கள் கேட்க, இதுவரை நான் மழைக்கும் ஜிம் நிழலில் ஒதுங்கியதில்லை. ஆனால் இனிமேல் போகப்போகிறேன். உடம்பை வளைத்து நெளித்து கட்டழகியாக மாறப்போகிறேன். அதையடுத்து, என் மீது படர்ந்திருக்கும் வில்லேஜ் முத்திரையை உடைத்தெரிந்து கொண்டு மாடர்ன் நடிகையாக களத்தில் குதிப்பேன் என்கிறாராம் லட்சுமிமேனன்.

No comments:

Post a Comment