விசாகப்பட்டினத்தில் ஸ்ரேயாவை காண திரண்ட ரசிகர்கள்
நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆந்திரா ரசிகர்கள் நடிகர், நடிகைகளை பார்க்க வெறித்தனமாக திரள்கிறார்கள். ஏற்கனவே அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, தமன்னா உள்ளிட்டோர் ஜவுளிக்கடை, நடிகைக்கடை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது அவர்களை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
நடிகைகள் கையை பிடித்து இழுத்து அத்து மீறி நடந்ததால் போலீஸ் தடியடியும் நடந்துள்ளது. அது போலவே விசாகப்பட்டினத்தில் ஸ்ரேயாவை காணவும் திரண்டார்கள். அவர் காரில் இருந்து இறங்கியதும் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். பாதுகாவலர்கள் கைகளை கோர்த்து பாதுகாப்பு வளையமிட்டு உள்ளே அழைத்து சென்றனர். அங்கிருந்து கூட்டத்தினரை பார்த்து கையசைத்தார்.
விழா முடிந்து ஸ்ரேயா புறப்படுவதுவரை கூட்டத்தினர் கலையாமல் நின்று கொண்டே இருந்தனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. நீண்ட நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது
No comments:
Post a Comment