கார்த்தி ஒரு பொம்பள பொறுக்கி?: பிரபல டைரக்டர் சொன்ன அஜால் குஜால் சமாச்சாரங்கள்!
பட்டணத்துக்கு வந்ததும் பண்ணைபுரத்தை மறந்து விட்ட ‘ராஜா’ பெருமக்கள் இப்போதெல்லாம் ஒன்றுகூடி சுகம் காண்பதே சாயங்காலம் 6 மணிக்கு மேல் ஏதாவது ஒரு ‘சரக்கு பார்ட்டி’யில் தான். இதை நாம் சொல்லவில்லை அவர்களே நேற்று நேரில் ஒப்புக் கொண்டார்கள்.
கார்த்தியின் சினிமா வாழ்நாளை தீர்மானிக்கப் போகும் படமாக வரும் 20-ஆம் தேதி ரிலீசாகப் போகும் படம் தான் ‘பிரியாணி’.
கங்கை அமரனின் மூத்த புதல்வர் ‘வெங்கட்பிரபுவின் டயட்’ தான் இந்த பிரியாணி. ரிலீசுக்கு முன்பு சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ‘பிரியாணி’ டீம் நேற்று இரவில் நம்மை சந்தித்தார்கள். தொடர் தோல்விகளின் வருத்தம் கார்த்தியின் சுருங்கிப்போன முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோதே நமக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
அதென்ன ‘பிரியாணி’? என்று டைட்டிலுக்கான அர்த்தம் கேட்டால் அதற்கு வெங்கட்பிரபு சொன்ன விளக்கம் தான் சூடேற்றும் சமாச்சாரமாக இருந்தது.
அதாவது இந்தப் படத்துல கார்த்தி ஒரு வுமனைசரா வர்றாரு… (அதாவது பொம்பள பொறுக்கி!). கார்த்தி ஒரு ப்ளேபாய் மாதிரி. சாயங்காலம் ஆனா ஏதாவது ஒரு பப்புக்கு போவார், தலைவலி ஸ்டார்ட் ஆகிற வரைக்கும் ‘சரக்கு’ போடுவார். அப்புறம் வயிறுமுட்ட ‘பிரியாணி’ சாப்பிட்டுட்டு அங்க இருக்கிற பிகர்கள்ல எதையாவது ஒன்னை ‘உஷார்’ பண்ணுவார்.
இப்படி தினமும் கார்த்திக்கு ‘பிரியாணி’ சாப்பிடலேன்னா அவருக்கு தூக்கமே வராது. அப்படி ஒரு இடத்துல ‘பிரியாணி’ சாப்பிட போறப்ப தான் அவருக்கு பிரச்சனையாயிடுது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வர்றார்ங்கிறது தான் ‘பிரியாணி’ படத்தோட கதை என்றார் வெங்கி.
வெங்கி ‘பிரியாணி’ என்று சொன்னது கார்த்தி பொண்ணுங்களை உஷார் பண்ணும் சமாச்சாரத்தை தான். நிஜ பிரியாணியை அல்ல ஆனால் இது கூடத் தெரியாமல் சாரி இது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா?, அதுல கத்தரிக்கா ரைத்தா யாரு? தயிர் பச்சடி யாரு? அவிச்ச முட்டை யாரு?ன்னு அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்துவது போல கேள்விகளைக் கேட்டு காமெடி கிளப்பிக் கொண்டிருந்தார்கள் சில நிருபர்கள்.
எப்போதுமே தன் நிஜ வாழ்க்கையில் தான் என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் அனுபவித்தோமோ? அதையெல்லாம் கதைகளாக்கி படமாக்குவதில் கெட்டிக்காரர் தான் வெங்கட்பிரபு. இதற்கு அவருடைய முந்தையை படங்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலே தெரியும். இதுவும் அவருடைய ரியல் லைப் ஸ்டோரி தான் போல…
அதனால் தான் படத்தைப் பத்தி நிறையோ, குறையோ என்கிட்ட மட்டும் சொல்லுங்க, தயவு பண்ணி பேப்பர்ல எழுதிடாதீங்க என்று சிரித்துக் கொண்டே சொன்ன வெங்கி கூடவே, நாங்க பார்ட்டிக்குப் போற விஷயங்களையும் கொஞ்சம் கம்மியா எழுதுங்க.., வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு, கார்த்தியையும் எங்ககூட பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போக எத்தனையோ தடவை ட்ரை பண்ணினோம், ஆனா அவர் வரவே மாட்டேன்னுட்டாரு… என்று அதையுமே சிரித்துக் கொண்டே தான் சொன்னார் வெங்கி.
படத்தில் குடி ,கூத்து, பொம்பள சமாச்சாரம் என கெட்டப்பையன் விஷயங்கள் குவிந்து கிடப்பதால் தான் ரிவைஸிங் கமிட்டி வரை சென்று படம் சென்சாரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக அதிலிருந்து மீண்டு கண்டிப்பாக 20- ஆம் தேதி ரிலீசாகி விடும் என்று நம்பிக்கையோடு சொன்னார் தயாரிப்பாளர் பிரபு.
அண்ணன் வெங்கியும் தம்பி பிரேம்ஜியும் அடிக்கும் குடி, கூத்து, கும்மாளத்தை குறிப்பெடுத்துச் சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை காது கொடுத்துக் கேட்கத்தான் ஒரு நாதியும் இல்லை.
No comments:
Post a Comment