Search This Blog

Monday, 30 December 2013

விஷாலுக்கு ஜோடியாக சம்மதிப்பாரா ஸ்ருதி?

விஷாலுக்கு ஜோடியாக சம்மதிப்பாரா ஸ்ருதி?

ஒரு வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் 2011ம் ஆண்டு அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். அதன்பிறகு தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்தார். அதையடுத்து ஸ்ருதிக்கு தமிழ் படங்கள் வாய்ப்பு மந்தமாகவே இருந்தது. இதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் இவர் நடித்துள்ள எவடு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ரேஸ் குர்ரம் பட ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்கிடையில் வெல்கம் பேக். கப்பர் ஆகிய 2 இந்தி படங்களில் நடித்துவருகிறார். தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு விஷால் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. பாண்டியநாடு படத்தை தயாரித்து நடித்த விஷால் இப்படத்தையும் சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சிங்கம் 2 வெற்றி படத்தையடுத்து ஹரி இப்படத்தை இயக்குகிறார். விஷால் -ஹரி இணையும் இரண்டாவது படம் இது. தற்போது திரு இயக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்ததும் ஹரி பட ஷூட்டிங் தொடங்க உள்ளது. இப்படத்தை 2014ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிக சம்பளம் தந்தால் மட்டுமே அவரது கால்ஷீட் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறதாம்.

No comments:

Post a Comment