Search This Blog

Tuesday, 3 December 2013

பாங்காக் விருந்து நிகழ்ச்சியில் சித்தார்த்- சமந்தா

பாங்காக் விருந்து நிகழ்ச்சியில் சித்தார்த்- சமந்தா

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா இடையே உள்ள நெருக்கம் பரவலாகத் தெரிந்ததுதான் என்றபோதிலும் அவர்கள் இருவரும் அதை வெளிப்படையாகக் கூறியதில்லை.
இந்த அழகான ஜோடி சமீபத்தில் பாங்காக்கில் ஒரு மனதை மயக்கும் விருந்து நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர். பார்ப்பதற்கு உண்மைபோல் தெரிந்தாலும் அவர்கள் ஒரு வர்த்தக விளம்பரத்தில் நடிப்பதற்காக அங்கு வந்துள்ள விபரம் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அழகு சாதன சோப்பான லக்ஸ் நிறுவனத்திற்கான ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர். ஸ்விட்சர்லாந்து நாட்டவரான இவோ வெஜ்கார்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான மைக்கி மெக்லாரி ரீமிக்ஸ் செய்துள்ள பிரபலமான பாடல் ஒன்றினைப் பின்னணியாக கொண்டு அந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அழகான பெண்ணிற்கும், ஆணிற்கும் ஏற்படும் பிணைப்பினை வெளிப்படுத்தும்விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப்படம் வரும் ஒன்றாம் தேதி முதல் தொலைக்காட்சி விளம்பரங்களில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாங்காக்கில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டபோது சித்தார்த், சமந்தா இருவருமே படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டும், கேலி செய்துகொண்டும் குழுவினருடனும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்ததாக படப்பிடிப்புக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment