Search This Blog

Friday, 13 December 2013

மொட்டை பாஸ் ஆனார் அஜீத்! சிவாவுடன் திருப்பதியில் மொட்டை போட்டார்

மொட்டை பாஸ் ஆனார் அஜீத்! சிவாவுடன் திருப்பதியில் மொட்டை போட்டார்

ஆரம்பம் வெற்றி பெற்றதற்காகவும், வீரம் படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவடைந்ததையொட்டியும், தனக்கு நடக்க இருக்கும் கால் ஆபரேஷன் சக்ஸசாக அமைய வேண்டியும் திருப்பதிக்கு மொட்டை போட்டார் அஜீத். வீரம் படத்தின் இயக்குனர் சிவாவுடன் திருப்பதி சென்ற அஜீத், அங்கு திருப்பதி ஏழுமலையானை வேண்டி மொட்டை போட்டுக் கொண்டார். அவருடன் இயக்குனர் சிவாவும் மொட்டை போட்டுக்கொண்டார். பின்னர் இருவரும் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

பின்னர் அஜீத் திருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் திருப்பதி வந்து பெருமாளை வணங்குவது எனது வழக்கம். முடிகாணிக்கை செலுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அடுத்தடுத்து படம் இருப்பதால் அது தள்ளிக்கொண்டே வந்தது. இப்போது அடுத்து நடிக்கும் கவுதம்மேனன் படம் பிப்ரவரியில் தொடங்குவதால். இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு முடிகாணிக்கை அளித்திருக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment