Search This Blog

Sunday, 29 December 2013

அதிரடி க்ரைம் த்ரில்லர்... சரத்குமாரை இயக்குகிறார் மிஷ்கின்?

அதிரடி க்ரைம் த்ரில்லர்... சரத்குமாரை இயக்குகிறார் மிஷ்கின்?

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு சரத் குமாரை வைத்து புதிய படம் இயக்குகிறார் மிஷ்கின் என தகவல் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை சரத்குமாரின் மனைவி ராதிகா, தனது ராடான் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். அவரது சமீபத்திய வெளியீடான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும் திருப்தியான வசூல் கிடைத்தது. இத்தனைக்கும் ஹீரோயின் இல்லாத படம் அது.

தன் அடுத்த படமாக, ஐம்பது வயதான ஒருவரை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லரை இயக்கப் போகிறாராம் மிஷ்கின்.
இந்தக் கதைக்கு சரத்குமார் சரியாக இருப்பார் என்பதால், அவரைச் சந்தித்து கதையை முழுவதுமாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.
கதை மற்றும் அதை மிஷ்கின் விதத்தில் அசந்துபோன சரத்குமார், உடனடியாக அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இந்தப் படத்தை தனது மனைவி ராதிகாவின் ராடான் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

No comments:

Post a Comment