கிடைக்குற படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் – ஆண்ட்ரியா அதிரடி!
‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ஆயிரத்தில் ஒருவன்’, ‘விஸ்வரூபம்’, ‘என்றென்றும் புன்னகை’ என்று சில படங்களில் மட்டுமே நடித்தாலும், பரவலான கவனம் பெற்றிருப்பவர் ஆண்ட்ரியா.
நடிப்பு – இசை என இருவழிப்பாதையில் பயணிக்கும் ஆண்ட்ரியா, ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகபட்சமான நடிப்பை வெளியே கொண்டு வந்திருக்கிறாராம்.
அதனால், இப்படம் திரைக்கு வரும்போது சராசரி நடிகையாக இல்லாமல் ஃபெர்பாமென்ஸ் நடிகையாகி விடுவேன் என்கிறார்.
அடுத்து, ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கும் ‘தரமணி’ படத்தில் அழுத்தமான காதல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா.
”காதல் கதை என்றாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப ஸ்பெஷலான படம் இது. இந்தப் படத்தில் நடித்து முடிக்கிற வரை மற்ற படங்களை தள்ளி வைத்திருக்கிறேன் .
இனி என்னை வெயிட்டான கேரக்டர்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் அழைப்பார்கள் .கிடைக்கிற படங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு எனது திறமையை முன்நிறுத்தும் படங்களாக பார்த்து தேர்வு செய்து நடிப்பேன் ” என்கிறார் ஆண்ட்ரியா.
No comments:
Post a Comment