ஜித்தன் 2 – சந்தானத்துடன் இணையும் ரமேஷ்
ரமேஷ் என்றால் அது யார் என்று கேட்பவர்களுக்கு ஜித்தன் ரமேஷ் என்றால் சட்டென்று தெரிந்துவிடும். ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன், ஜீவாவின் அண்ணன்.
ஜித்தன் படத்தில் ஆரம்பமான அவரின் திரைவாழ்க்கை ஜித்தன் ரமேஷ் என்ற அடைமொழியை தவிர வேறு எதையும் தரவில்லை. கடைசியாக ரமேஷ் நடித்தப் படங்கள் தோல்வியில் துவள, ஒஸ்தி படத்தில் சிம்புவின் சகோதரராகவும் நடித்தார்.
தற்போது ஜில்லா படத்தின் தயாரிப்பு பணிகளை தனது தந்தைக்காக இவர்தான் அதிகம் கவனித்து வருகிறார். இனி அப்படியே தயாரிப்பளரின் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று நினைத்தால் அவரின் உள்ளே இருக்கும் நடிகன், அது எப்படி என்று குதித்து வெளியேறியிருக்கிறான்.
ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். சந்தானம் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஹீரோயின் சுவிஸ்டா (ஸ்வீட்டுடான்னே வச்சிருக்கலாமே) என்ற புதுமுகங்கள். மற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் வேலை நடந்து வருகிறது. ஜித்தன் படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். ஜித்தன் 2 வையும் அவரே இயக்குகிறார்.
No comments:
Post a Comment