Search This Blog

Thursday, 5 December 2013

விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு: திரையுலகினர் வாழ்த்து

விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு: திரையுலகினர் வாழ்த்து

இளையதளபதி விஜய் நேற்றுடன் நடிக்கவந்து 21 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்றுதான் இவர் நடிகராக அறிமுகமாகிய ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் வெளியானது.அதனைத் தொடர்ந்து காதல், காமெடி, ஆக்ஷன் என பலமுகங்களில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த சாதனையை வாழ்த்தி திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, 56 படங்களில் நடித்துள்ள இவரது அடுத்த படமான ‘ஜில்லா’ வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளிவர உள்ளது.
இதனைத் தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படமான ‘துப்பாக்கி’யை இயக்கிய ஏ.ஆர் முருகதாசுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதே சமயத்தில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்கிறார். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு பல பிரபல இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் கூட, ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கிய நேசன் என்ற ஒரு இயக்குனருக்குதான் தனது ஜில்லா படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார்.
முன்னணி நடிகர்களின் வரிசையில் உள்ள நடிகர் விஜய்யின் சில படங்கள் சுமாராக ஓடியிருந்தபோதிலும் அவரது வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’, ‘கில்லி’, ‘போக்கிரி,’ ‘நண்பன்’ மற்றும் ‘துப்பாக்கி’ போன்ற அவரது பல படங்கள் வெற்றிக்கோட்டை தொட்டவையாகும். இந்த சாதனை மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வியாபாரமாகும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மூன்று பேரில் இவரும் ஒருவராகத் திகழ்கின்றார்.

No comments:

Post a Comment